விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே..! ஹர்பஜனுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி அசத்திய சச்சின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதிலிருந்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக தமிழில் பதிவிட்டுவந்தார். போட்டிகளின் வெற்றி, தோல்விகள் குறித்தும் தமிழ் உவமைகள் பதிவிட்டு அசத்தி வந்தார். அவருடைய பதிவுகள் தமிழக நெட்டீசன்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நெட்டீசன்கள், அடுத்த வள்ளுவர் என்ற அளவுக்கு ஹர்பஜனைப் புகழ்ந்தார்கள்.

ஐ.பி.எல் தொடர் நிறைவுபெற்ற நிலையிலும் அவ்வப்போது தமிழில் ட்விட் செய்துவருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு விரேந்திர சேவாக், பி.சி.சி.ஐ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவருடைய ட்விட்டர் பதிவில், 'விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, ஹர்பஜன். ஹவ் எ ப்ளாஸ்ட்' என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுகரின் வாழ்த்தில், தமிழக நெட்டீசன்கள் தமிழில் கமெண்ட் செய்து ஹர்பஜனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!