`ஜிம்பாவேவை கலங்கடித்த ஆரோன் ஃபின்ச்' - டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் சேர்த்து சாதனை படைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 

ஃபின்ச்

@icc

ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 முத்தரப்பு போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாவே பீலடிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்கள் ஷார்ட், ஆரோன் ஃபின்ச் வலுவான அடித்தளம் அமைத்து. ஜிம்பாவே வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். பவர் பிளேயில் 75 ரன்களைக் குவித்த ஆஸ்திரேலியா அணி பத்து ஓவர்களில் 100 ரன்களைக் கடதது. பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் அடித்து நொறுக்கிய ஆரோன் ஃபின்ச் 50 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். 

அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை எட்டி 150 ரன்களைக் கடந்தார். 76 பந்துகளில் 172 ரன்கள் சேர்த்த நிலையில் ஹிட் விக்கெட்டாகி  ஆட்டமிழந்தார். ஃபின்ச் ஆட்டமிழக்கையில் 10 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடித்திருந்தார். இதற்கு முன்பு டி20 போட்டியில் தனிநபர் அடித்த அதிகபட்ச  ரன்கள் 156 மட்டுமே. இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆரோன் ஃபின்ச். இப்போது அவரது சாதனையையே அவரே முறியடித்திருக்கிறார். டி20 வரலாற்றில் ஃபின்ச், ஷார்ட் கூட்டணி 223 ரன்கள் சேர்த்து சாதனை புரிந்திருக்கிறது. டி20 வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேலே சேர்க்கப்பட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாவே அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

கத்துக்குட்டி அணியான ஜிம்பாவேவிடம் இந்தப் பெரும் சாதனையை ஆஸ்திரேலியா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!