கிரிக்கெட் HallOfFame-ல் டிராவிட் பெயர் உண்டு... சச்சின் பெயர் இல்லை... காரணம் என்ன?

சச்சின்

கிரிக்கெட் உலகில் முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்று,  ICC Hall of fame-ல் இடம் பிடிப்பது. இதுவரை இந்தியாவிலிருந்து பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகிய நால்வரும், இரண்டு நாள்களுக்கு முன்னர் ராகுல் டிராவிட்டும் இதில் இடம் பிடித்திருக்கிறார்கள். எத்தனையோ ஸ்டார்களை இந்தியா உருவாக்கியிருந்தாலும் ஐந்தே பேருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த 5 பேரில் சச்சின் பெயர் இல்லை. காரணம், அவர் சாதனைகள் செய்யவில்லை என்பது அல்ல. இதற்கான விதிகள் அப்படி.

இந்த ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற நிறைய விதிகள் இருந்தாலும் முக்கியமான ஒன்று, கடந்த 5 ஆண்டுகளில் அந்த வீரர் ஒரு சர்வதேசப் போட்டிகூட விளையாடியிருக்கக் கூடாது என்பதுதான். ஆனால் சச்சின், 2013 நவம்பர் மாதம் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருக்கிறார். அதனால்தான், இந்த முறை சச்சினின் பெயர் இடம்பெறவில்லை. வேறு எந்தக் காரணமும் இல்லை.

சச்சின் பெயர் இல்லாமல் ஒரு கிரிக்கெட் விஷயம் இருக்க முடியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!