உலகக்கோப்பை கால்பந்து: இன்று தொடங்கும் காலிறுதி ஆட்டங்கள்! | In football world cup, quarterfinal matches will start

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (06/07/2018)

கடைசி தொடர்பு:12:42 (06/07/2018)

உலகக்கோப்பை கால்பந்து: இன்று தொடங்கும் காலிறுதி ஆட்டங்கள்!

ரஷ்யாவில், தற்போது கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. லீக் சுற்று ஆட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்து, காலிறுதிச்சுற்றில் விளையாடும் அணிகள் உறுதிசெய்யப்பட்டன. காலிறுதித் தொடரை நடத்தும் ரஷ்யா, உருகுவே, பிரான்ஸ், பிரேஸில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து, குரோசியா ஆகிய அணிகள் தகுதிபெற்றன. 

கால்பந்து

இரண்டு நாள் ஓய்வுக்குப் பின்னர், இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. இன்று, இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி, மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், உருகுவே அணியும் பிரான்ஸ் அணியும் மோதுகின்றன. உருகுவே, இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அணியும் முந்தைய சுற்றில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி நம்பிக்கையுடன் களம் காணுகிறது. இரு அணி வீரர்களும் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முதல் போட்டியிலேயே அனல்பறக்கும். 

கால்பந்து

இன்று இரவு 11.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில், பிரேஸில் அணி பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. பிரேஸில் அணியைப் பொறுத்த வரை முந்தைய சுற்றில் மெக்ஸிகோ அணியை வீழ்த்தியது. அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மரும், கடந்த போட்டியில் கோல் அடித்து நம்பிக்கையுடன் உள்ளார்.  பெல்ஜியம் அணி, கடந்த சுற்றில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில், ஸ்வீடன்- இங்கிலாந்து அணிகளும், ரஷ்யா- குரோஷியா அணிகளும் மோதுகின்றன.