`மெர்லின்’... இந்தியச் சுழலை சமாளிக்க இங்கிலாந்தின் வியூகம்! #ENGvIND PREVIEW

முதல் டி-20 போட்டியில் விளையாடிய அதே அணிதான் இன்றும் விளையாடும். அதே பேட்டிங் ஆர்டர்தான். கே.எல் ராகுல் முதல் டவுன் பேட்ஸ்மேனாக வர, கோலி இரண்டாவது டவுனில்தான் களமிறங்குவார். ரெய்னா, தோனி, ஹர்டிக் பாண்டியா மூவரும் டெத் ஓவர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள்.

`மெர்லின்’... இந்தியச் சுழலை சமாளிக்க இங்கிலாந்தின் வியூகம்! #ENGvIND PREVIEW

ங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உலகின் பவர்ஃபுல் அணியாக தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய உச்சகட்ட நாள் இன்று! ஆஸ்திரேலியாவைச் சொந்த மண்ணில் ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து, இந்தியாவையும் வீழ்த்தும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இதையேதான் நினைத்தது. ஆனால், நடந்ததோ வேறு. #ENGvIND

#ENGvIND

குல்தீப் யாதவின் சுழலைச் சந்திக்கமுடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணற, கே.எல் ராகுலுக்கு எப்படி பெளலிங் போடுவது என்பதே புரியாமல் இங்கிலாந்து பெளலர்கள் திண்டாடினர். குல்தீப்பின் இடது கை சைனாமேன் பெளலிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. கே.எல் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இந்தியா செம ஈஸியாக இங்கிலாந்தை வீழ்த்தியது. 

முதல் தோல்வியை இங்கிலாந்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. டேவிட் வில்லி, ``இந்தியர்கள் சரியான ஸ்பிரிட்டில் முதல் மேட்ச்சை விளையாடவில்லை'' என விமர்சிக்கிறார். `இந்திய ஸ்பின்னர்களை அடுத்தடுத்த போட்டிகளில் சமாளித்துவிடுவோம்’  என்கிறார் இயான் மோர்கன். ஆனால், உண்மையில் இந்திய அணி இருக்கும் தற்போதைய ஃபார்மில் இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்த மிகப்பெரிய சாதனைகளைச் செய்தாக வேண்டும். 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இங்கிலாந்து ஸ்பின்னர்கள் மொயின் அலியும், ரஷித்தும் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க வேண்டும். இது நடக்குமா? 

இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது டி-20 இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கே மிகமிக முக்கியமான போட்டி. இன்று தோல்வியடைந்தால் இந்தியா டி-20 தொடரை வென்றுவிடும் என்பதால் இங்கிலாந்து தனது அத்தனை அஸ்திரங்களையும் ஏவத் தயாராகிக்கொண்டிருக்கிறது!

மெர்லின் மெஷின்!
குல்தீப் யாதவின் சைனாமேன் சுழற்பந்தைச் சமாளிக்க, இங்கிலாந்து புதுவித பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. மெர்லின் ஸ்பின் பெளலிங் மெஷின் என அழைக்கப்படும் இந்தச் சாதனத்தில் பந்து எப்படி வேண்டுமானாலும் சுழன்றுவரும். இந்த மெஷின் போடும் பெளலிங்கைத்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடி பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

#ENGvIND

கார்டிஃப்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி-20 கார்டிஃபில் நடக்கிறது. இதை முழுக்கமுழுக்க பெளலிங் பிட்ச் என்றே சொல்லலாம். ஃப்ளாட்டான, ஹார்டான பிட்ச் என்பதால் ஸ்பின்னுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். இந்த பிட்ச்சில் 150 ரன்கள் என்பதே சவாலான ஸ்கோராகத்தான் இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும். 

தினேஷ் கார்த்திக் பாவம்!
ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனாக இருந்தாலும் தினேஷ் கார்த்திக் இன்றைய இந்திய அணியில் இடம்பிடிப்பதும் டவுட்தான். சுரேஷ் ரெய்னா பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் சுழற்பந்தும் வீசுவார் என்பதால் கோலி இன்றும் சுரேஷ் ரெய்னாவையே தேர்ந்தெடுப்பார். முதல் டி-20 போட்டியில் விளையாடிய அதே அணிதான் இன்றும் விளையாடும். அதே பேட்டிங் ஆர்டர்தான். கே.எல் ராகுல் முதல் டவுன் பேட்ஸ்மேனாக வர, கோலி இரண்டாவது டவுனில்தான் களமிறங்குவார். ரெய்னா, தோனி, ஹர்டிக் பாண்டியா மூவரும் டெத் ஓவர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். 

#ENGvIND

இங்கிலாந்திலும் நோ சேன்ஜ்?!

இங்கிலாந்து அணியில் இப்போதைக்கு ஊசலாட்டத்தில் இருப்பது ஜோ ரூட்டின் இடம்தான். 5-6வது இடத்தில் வந்து ஜோ ரூட்டால் பெரிதாக விளையாட முடியவில்லை என்பதோடு, அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவு. இதனால் டெத் ஓவர்களில் அவரால் பெரிதாக ரன்கள் சேர்க்கமுடியவில்லை. ஜோ ரூட் 1 டவுன் அல்லது 2 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கவேண்டும். இல்லையென்றால், அவருக்கு பதிலாக இன்னொரு ஆல் ரவுண்டரை அணிக்குள் சேர்க்க வேண்டும். ஆனால், ஜோ ரூட்டை இயான் மோர்கன் வெளியே அனுப்பமாட்டார் என்றே தெரிகிறது.

இன்றைய போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்றிவிடவேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார் விராட் கோலி. இங்கிலாந்தும் இந்தியாவை விட்டுவிடக் கூடாது என நினைக்கிறது. ஆனால், பேட்டிங் லைன் அப்பிலும், பெளலிங் லைன் அப்பிலும் சிறந்த அணியாக இருக்கும் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!