உலகக் கோப்பை கால்பந்து - உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றுகள் முடிந்து இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் ஆட்டத்தில் பிரானஸ் - உருகுவே அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2 - 0 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறியிருக்கிறது.

கால்பந்து

உருகுவே அணியின் நட்சத்திர வீரரான கவானி காயம் காரணமாக போட்டியில் களமிறங்கியிருக்கவில்லை. போட்டி தொடங்கியதிலிருந்தே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்த, இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது பிரான்ஸ். கிரிஸ்மான் பந்தை உதைக்க வாரானே தலையால் தட்டி கோல் செய்ததன் மூலம் பிரான்ஸ் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் பிரான்ஸின் ஆதிக்கமே நீடித்தது. ஆட்டத்தின் 61 - வது நிமிடத்தில் கிரிஸ்மான் அபாரமான ஷார்ட் மூலம் கோல் அடிக்க பிரான்ஸ் 2 - 0 என்று முன்னிலை பெற்றது. 

2 - 0 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய உருகுவே அணி கோல் அடிக்க வேண்டும் முயற்சியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி வரை அவர்களால் கோல் அடிக்க முயலவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 2 - 0 என்ற கணக்கில் உருகுவேவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!