உலகக்கோப்பை கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. மூன்றாவது முறையாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து

இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் ஸ்வீடனும், இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய 30 - வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அரங்கத்தை அதிரச் செய்தது. இங்கிலாந்து அணியின் ஹாரி முகுரே முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் ஸ்வீடன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் 58 - வது நிமிடத்தில் டேலே அல்லி இரண்டாவது கோலடிக்க இங்கிலாந்து 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு ஸ்வீடன் வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

இதற்கு முன்பு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவை வெற்றி பெற்றிருந்தன. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ரஷ்யாவும் குரேஷியாவும் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!