கோப்பை யாருக்கு? இன்று இங்கிலாந்து இந்திய அணிகள் மோதும் 3 வது டி20 போட்டி! | India vs England 3rd t20 match

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/07/2018)

கடைசி தொடர்பு:11:45 (08/07/2018)

கோப்பை யாருக்கு? இன்று இங்கிலாந்து இந்திய அணிகள் மோதும் 3 வது டி20 போட்டி!

இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி போட்டியானது இன்று பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 போட்டிக்கான பயிற்சியில் விராட்

Photo credits: BCCI/Twitter

முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவில் வெற்றி எளிதானது. ஆனால் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் மற்றும் சஹால் என இருவரையில் சிறப்பாக எதிர்கொண்டனர். வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அணியில் பும்ரா இல்லாத குறை தெரிகிறது. டி20 ஸ்பெஸலிஸ்ட் என்னும் வீரர், காயம் காரணமாக விளையாடாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமார் கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார். உமேஷ் யாதவ் விக்கெட் வீழ்த்துகிறார். சுழலும் வேகமும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால், இங்கிலாந்து வீரர்களைக் கட்டுப்படுத்தலாம். இந்திய அணியின் பேட்டிங் தான் பலம். ஆனால், கடந்த போட்டியில் மோசமான தொடக்கம் காரணமாக இந்திய அணி 
நல்ல ஸ்கோரை எட்ட முடியாமல் திணறியது. அதனால், நல்ல தொடக்கம் அவசியம். 

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம். அதனால் தொடக்கம் முதலே அவர்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் அணிக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது. இந்தத் தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடாத ரூட், அல்லது வில்லி மாற்றப்படலாம்.  இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்குப் போட்டி துவங்குகிறது