வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/07/2018)

கடைசி தொடர்பு:00:00 (13/07/2018)

மகுடம் சூடுவாரா செரினா? - விம்பிள்டன் டென்னிஸில் ஃபைனலுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு செரினா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். 

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, லண்டனில் நடைப்பெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்  ஜெர்மனியின் ஜார்ஜஸை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய செரினா  6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜார்ஜஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டியில் கெர்பருடன் மோதவுள்ளனர். 2016 -ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செரினா, கெர்பரை வீழ்த்தியிருந்தார். 

கடந்த ஆண்டு, செரினா கர்ப்பமானதால் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் விலகியிருந்தார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஓய்வுபெறுவார் என எதிர்ப்பார்த்தனர். ஆனால், விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் களமிறங்கினார். ஆனால், காயம் காரணமாக பாதியில் வெளியேறிவிட்டார். காயத்திலிருந்து மீண்டு வந்தவர் விம்பிள்டன் தொடரில் பங்கேற்றார். தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடிவரும் செரினா, தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டத்தை வென்றால், அது செரினாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.