`குல்தீப்பை சமாளித்த இங்கிலாந்து' - லார்ட்ஸில் முதல் சதத்தை ருசித்த ஜோ ரூட்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார்.

ஜோ ரூட்

@ICC

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் நேற்று முன்தினம் நடத்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே களமிறங்கினர். வழக்கம் போல இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாகக் களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். 

ஆனால், முதல்போட்டியை போல் இந்தப் போட்டியிலும்சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். குல்தீப்பின் முதல் ஓவரில் ஜானி பேர்ஸ்டோ போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் சீரான இடைவெளியில் ராயையும், கேப்டன் மோர்கனையும் குலதீப் வெளியேற்றினார். இருப்பினும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானம் காட்டினார். குறிப்பாக ஜோ ரூட் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினார். அவர் 48 ஓவரில் சதம் அடிக்க அதே ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. கடைசி கட்டத்தில் ரூட்டுடன் சேர்ந்தது வில்லி அதிரடி காட்டியதுடன் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 113 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!