உலகக்கோப்பை கால்பந்து 3-வது இடத்துக்கான போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்!

கால்பந்து, பெல்ஜியம்

லகக்கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரு அணிகளும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும். அதன்படி, ஃபிரான்ஸுடனான அரையிறுதியில் தோற்ற பெல்ஜியம் அணியும், மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவிடம் தோற்ற இங்கிலாந்து அணியும் மூன்றாவது இடத்துக்காக இன்று பலப்பரீட்சை நடத்தியது. 

தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் மியூனியர் முதல் கோல் அடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதற்கு பின்னர் எந்த அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. இரண்டாவது பகுதியில் கோல் அடித்துவிட இங்கிலாந்து கடுமையாகப் போராடியது. ஆனால், பெல்ஜியம் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹசார்டு 2-வது கோல் அடித்து இங்கிலாந்தை திணறடித்தார். இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பெல்ஜியம். நாளை நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!