வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (15/07/2018)

கடைசி தொடர்பு:11:51 (16/07/2018)

தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் - கோப்பையை நழுவவிட்ட பி.வி.சிந்து!

தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கோப்பையை தவறவிட்டுள்ளார். 

பி வி சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகரான பாங்காக்கில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இதில் இந்திய தரப்பில் வீரர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இருந்து வெற்றிக்கொடி நாட்டி வந்த பிவி சிந்து நேற்று  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

இதையடுத்து இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 15-21 என பறிகொடுத்த சிந்து இரண்டாவது செட்டையும் 18-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியை தழுவி கோப்பையை தவறவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க