நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில்,  6-2, 6-2, 7-6 என்ற  செட் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றினார் ஜோகோவிச். 

ஜோகோவிச்

கடந்த ஜூலை இரண்டாம் தேதி தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மோதினர். தொடக்கம் முதலே இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மனம் தளராமல் இறுதி வரை போராடினர். டை பிரேக் வரை சென்ற முதல் செட்டை ஆண்டர்சன் 7-6 (8-6) கைப்பற்றினார். இதற்கு, செட்டில் பதிலடிகொடுத்தார் இஸ்னர். மீண்டும் டை பிரேக்கர் வரை சென்ற செட்டை 6-7 (5-7) என்ற கணக்கில் இஸ்னர் வென்றார். 3-வது செட்டை இஸ்னர் மீண்டும் வெல்ல, நான்காவது செட்டைக் கைப்பற்றினார் ஆண்டர்சன்.  

இருவரும் இரண்டு செட்டை கைப்பற்றியதால், இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை முடிவுசெய்யும் இறுதி செட் தொடங்கியது. இருவரும் வெற்றிக்காக கடுமையாகப் போராடினர். இறுதி செட் என்பதால், இதில் டை-பிரேக் முறை கடைப்பிடிக்கப்படாது. இதனால், இருவரும் மாறி மாறி செட்களைக் கைப்பற்றியதால் ஆட்டம் தொடர்ந்துகொண்டே சென்றது. இறுதி செட் மட்டும் 2 மணி நேரம் 50 நிமிடம் நீடித்தது. இறுதியில், ஆண்டர்சன் 26-24 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஒட்டுமொத்தமாக, இந்த முதல் அறையிறுதிப் போட்டி மட்டும் 6 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்தது. 

முதல் போட்டியின் தாமதத்தால், ஜோகோவிச் மற்றும் நடால் மோதும் இரண்டாவது போட்டியும் தாமதமாகத் தொடங்கியது. குறைவான நேரமே இருந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட, ஆட்டம் முடியும் நேரம் ஜோகோவிச் 6-4, 3-6, 7-6(11-9) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆண்டர்சன் கடும் நெருக்கடியோடு 3-வது செட்டை எதிர்கொள்ள  ஜோகோவிச்சிற்கு ஆண்ட்சர்சன் கடும் போட்டியாகத் திகழ்ந்தார். ஆனாலும்,  ஆண்டர்சன் ஜோகோவிச்சை முறியடிக்க முடியாமல் திணற, 3-வது செட்டையும் ஜோகோவிச் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறார். இந்த வெற்றியின்மூலம் ஜோகோவிச்  4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கியிருக்கிறார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!