ஆடுகளத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளருக்கு நிகழ்ந்த சோகம்!

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தற்போது, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதல் போட்டியில், பாகிஸ்தான் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. நேற்று இரண்டாவது போட்டி, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற முன்னிலையில் உள்ளது. 

இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஹசன் அலி தனது 9-வது ஓவரை வீசினார். இதில், தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட் வீழ்த்தியதும் தனது வழக்கமான பாணியில் அதைக் கொண்டாடினார். ஹசன் அலி வழக்கமாக விக்கெட் எடுத்ததும் ”பாம் எக்ஸ்ப்ளோஷன்”(BOMB EXPLOSION) ஸ்டைலில் கொண்டாடுவார். நேற்று, இரண்டாவது விக்கெட் எடுத்துக் கொண்டாடியபோது, அவரது கழுத்துப் பகுதியில் வலி எடுத்தது. உடனடியாக வீரர்கள் அவரைச் சூழ்ந்துக்கொண்டனர். மருத்துவரும் உடனடியாக வந்து சிகிச்சையளித்தனர். கழுத்துப் பகுதியில் சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த வீடியோக்கள், இப்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.   
 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!