`இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்!’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM | Fakhar Jamans double hundred propel Pakistan to 399 runs against Zimbabwe in 4th ODI

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/07/2018)

கடைசி தொடர்பு:18:33 (20/07/2018)

`இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்!’ - ஜிம்பாப்வேயில் அசத்திய ஃபகர் ஜமன் #PAKvsZIM

ஜிம்பாப்வே அணிக்கெதிரான 4 வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ஃபகர் ஜமனின் சாதனை இரட்டைச் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. 

பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமன்

Photo Credit: Cricket.com.au

ஜிம்பாப்வே அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் அணி தொடரை வென்ற நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை இமாம் உல்ஹக் மற்றும் ஃபகர் ஜமன் ஆகியோர் தொடங்கினர். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவர்களில் 304 ரன்கள் குவித்தது. இமாம் உல்ஹக், 122 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவே. அதேபோல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட் ஜோடி குவித்த அதிகபட்ச ரன்களும் இதுவே. 
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 92 பந்துகளில் சதமடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 148 இரட்டை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக சயீத் அன்வர் எடுத்த 194 ரன்களே பாகிஸ்தான் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. இமாமைத் தொடர்ந்து களமிறங்கிய ஆசிஃப் அலி, 22 பந்துகளில் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் மசகாட்சா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.