சர்வதேச வில்வித்தை பட்டியல்! வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி

சர்வதேச வில்வித்தைப் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய பெண்கள் அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

வில்வித்தை இந்தியா

சர்வதேச வில்வித்தைப் போட்டியில் காம்பவுண்டு பிரிவின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய பெண்கள் அணி முதல் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வில்வித்தைப் போட்டியின் சர்வதேச தரத்தில் இந்தியா முதல் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். 342.600 என்ற புள்ளிகளைப் பெற்று இந்தியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய வில்வித்தை சம்மேளனம் இந்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 336.600 புள்ளிகளைப் பெற்று சீனா இரண்டாவது இடத்தையும் 302.300 புள்ளிகளைப் பெற்று கொலம்பியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதுள்ளன. அமெரிக்கா, கொரியா, ரஷ்யா, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

வில்வித்தை

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை வில்வித்தைக் காம்பவுண்டு போட்டிக்குப் பிறகு, இந்தத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த த்ரிஷா தேப், முஸ்கான், ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த வெற்றிக்கு; பிறகே சர்வதேச அளவில் வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!