வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (28/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (28/07/2018)

இங்கிலாந்து மைதானத்தில் நடனமாடி அசத்திய கோலி - தவான்!

பயிற்சி ஆட்டத்தின்போது, மைதானத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கோலி - தவான் பந்தாரா நடனமாடிய வீடியோ, ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

கோலி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில்,     டி- 20 தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றின. அடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1- ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, இரு அணி வீரர்களும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள், கவுண்டி தொடரில் விளையாடிவருகின்றனர். இந்திய அணி - எஸ்எக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்தப் போட்டி, கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர்கள் மைதானத்தில் நுழைந்தபோது, இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.  கேப்டன் கோலியும், தவானும் இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர். இந்த வீடியோ காட்சியை எஸ்எக்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இரு பிசிசிஐ வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக உள்ளனர் எனப் பதிவிட்டுள்ளனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாமில் வரும் புதன்கிழமையன்று (ஆகஸ்ட்1-ம் தேதி) தொடங்குகிறது.