விராட் கோலியுடன் விஜய் மல்லையா போஸ்?! - ரசிகர்களைக் குழப்பிய போட்டோ

இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் விராட் கோலி, விஜய் மல்லையாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி

Photo Credit: Instagram/@indiancricketteam

இந்திய அணி, டி-20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. டி-20, ஒருநாள் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து எஸெக்ஸ் அணியுடன் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரசிகர்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று பதிவேற்றப்பட்டது. அந்தப் படத்தில் விஜய் மல்லையா போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் தோள் மீது விராட் கோலி கை வைத்து நிற்கிறார். இந்திய வங்கிகளில் 9,000 கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவுடன் கேப்டன் விராட் கோலி போஸ் கொடுப்பதா என நெட்டிசன்கள் ஒரு சிலர் பொங்கி எழுந்துவிட்டனர். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘புகைப்படத்தில் இருப்பவர் விஜய் மல்லையா அல்ல, அவரது சாயலில் இருப்பவர் மட்டுமே என்று ஒரு சில ரசிகர்களும் கருத்துத் தெரிவித்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் இன்ஸ்டாகிராம் பதிவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!