பழைய விராட் கோலி இல்ல... என்ன சொல்கிறார் முன்னாள் கேப்டன் அசாருதீன்!

விராட் கோலி ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதீன் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பர்மிங்ஹாம்மில் வரும் ஆகஸ்ட், 1-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கோலி  `ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேன்’ என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் கருத்து தெரிவித்துள்ளார். கோலியின் கடந்த கால மோசமான ஆட்டத்தை நினைவுக் கூர்ந்தவர், அதில் இருந்து தற்போது முற்றிலும் மாறுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்தத் தொடரை இந்தியா 1-3 என்ற நிலையில் இழந்தது. அந்தத் தொடரில்  5 போட்டிகளில் விளையாடி 134 ரன்கள் மட்டுமே எடுத்தார் கோலி. அது தான் அவரது முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர். ஆனால் தற்போதைய தொடரில் குறைந்த அளவிலான ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த 6 போட்டிகளில் கோலி 301 ரன்கள் குவித்துள்ளதை அசாரூதின் குறிப்பிட்டு பேசினார். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு பிறகு கோலி முழுமையான பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். தற்போது ஏராளமான ரன்களை தனக்கு பின்னால் வைத்துள்ளார். மேலும்  அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.

கிரிக்கெட் என்பது தனி நபர் விளையாட்டு அல்ல. அதை அப்படி விளையாடவும் முடியாது. அனைவரும் ரன்களை குவிக்க வேண்டும் ஒருவரால் மட்டும் வெற்றியை பெற்ற தர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பந்து நன்கு சூழல ஆரம்பித்து விட்டால் போட்டி வேறுமாதிரி இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும்;இருப்பினும் இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என அசாரூதின் தெரவித்துள்ளார்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!