உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018' தொடரில் 'பி' பிரிவில் தனது மூன்றாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்தியா. இந்த டிராவின் மூலம் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதிலிருந்து தப்பியதோடு, கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. உலகக்கோப்பை ஆட்டத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

ஹாக்கி

இன்றைய ஆட்டத்தின் முதல் கோலை அமெரிக்காவின் மார்கஸ் பவொலினோ 11ஆவது நிமிடத்தில் அடித்தார். அதன்பின்னர் இந்திய அணியின் ஆட்டத்தில் அனல்பறந்தது. அதன் காரணமாக அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் இந்திய அணிக்குக் கிடைத்தன. ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெனால்டி கார்னரை கோலாக மாற்றி சமன் செய்தார். அதன்பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை வேறெந்த கோலும் விழாததால் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

முன்னதாக, இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் 0 - 1 என்ற கோல்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதையடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுமா எனப் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் இன்றைய ஆட்டத்தில் டிரா செய்து ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!