வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (31/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (31/07/2018)

இங்கிலாந்தின் 1000-வது டெஸ்ட்... சொதப்பல்களைச் சரிசெய்ய சவால்களுடன் காத்திருக்கும் கோலி! #ENGvIND

இங்கிலாந்தில் சரியாக விளையாடமுடியவில்லை என்பதோடு, கூடுதலாக இந்த முறை கேப்டன் பொறுப்பையும் சுமப்பதால் பெரும் பிரஷ்ஷரில் இருக்கிறார் கோலி.

இங்கிலாந்தின் 1000-வது டெஸ்ட்... சொதப்பல்களைச் சரிசெய்ய சவால்களுடன் காத்திருக்கும் கோலி! #ENGvIND

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தைத் தோற்கடிப்பதைத்தான் எல்லா நாடுகளும் பெருமையாகக் கருதுகின்றன. அதேபோல, தங்கள் மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை இங்கிலாந்து எல்லா அணிகளுக்கும் கொடுத்துவிடுவதில்லை. இந்தியாவுக்குச் சிலகாலம் 5 டெஸ்ட் அந்தஸ்தை வழங்காமல் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2014-ல் தான் இந்தியாவுக்கு அந்தப் பெருமையை வழங்கியது. ஆனால் கோலிக்கு? #ENGVSIND

கோலி

கோலிக்கு நேர்ந்த அவமானம்!

சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இந்தியா. 2014-ல் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரை  1-3 என இழந்தது இந்தியா. தற்போதைய இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி வாழ்நாளில் மறக்கவே முடியாத டெஸ்ட் தொடர் இது. 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸிலுமே விளையாடிய விராட் கோலி குவித்த மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா... வெறும் 134 ரன்கள். இந்த சீரிஸில் கோலியின் அதிகபட்ச ஸ்கோரே  39 ரன்கள்தாம். இந்த சிரீஸை தன் கேரியரில் மிகப்பெரிய அவமானமாகவே நினைக்கிறார் விராட் கோலி. அதனால்தான் இந்த சீரிஸ் தொடங்குவதற்கு முன்பாக கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பிளான் போட்டார். ஆனால், அது நடக்கவில்லை. எஸெக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்திருப்பதுதான் கோலிக்கு இப்போது பெரும் ஆறுதலாக இருக்கும்.

டாப் ஸ்கோரர் முரளி விஜய்!

2014 இங்கிலாந்து சீரிஸில் இந்தியாவின் டாப் ஸ்கோரர் முரளி விஜய். 10 இன்னிங்ஸ்களில் 402 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதங்கள். அந்த ஒரே தகுதியால்தான் முரளி விஜய் மீண்டும் இந்தத் தொடரில் இடம்பிடித்திருக்கிறார். முரளி விஜய்க்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர் எம்.எஸ்.தோனி. 10 இன்னிங்ஸிலும் விளையாடி 349 ரன்கள் அடித்தார் தோனி. இவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் இருப்பது அஜிங்கியா ரஹானே. 299 ரன்கள் அடித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. பெளலர்தான். புவனேஷ்வர் குமார்தான் நான்காவது டாப் ஸ்கோரர். ஆனால், புவனேஷ்வர் குமாரும் இப்போது காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் இல்லை.

கோலி

பெரும் பிரஷ்ஷரில் கோலி!

இங்கிலாந்தில் சரியாக விளையாடமுடியவில்லை என்பதோடு, கூடுதலாக இந்த முறை கேப்டன் பொறுப்பையும் சுமப்பதால் பெரும் பிரஷ்ஷரில் இருக்கிறார் கோலி. கடந்தமுறை இங்கிலாந்தில் தன்னை பயமுறித்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு இருவருமே இங்கிலாந்து அணியில் இருப்பது கோலிக்குப் பெரிய சவால். இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்தால் கோலிக்கு அது மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும். அதேபோல, கோலி பேட்டிங் ஆடவரும்போது இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் இருவரையும் அதிகம் பயன்படுத்துவார்.

இந்தியாவின் ப்ளேயிங் லெவன்!

கடந்த சீரிஸின் டாப் ஸ்கோரர் என்கிற அடிப்படையில் முரளி விஜய் இந்திய  அணியில் இடம்பிடித்துவிடுவார். ஷிகர் தவான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக முரளி விஜய்யுடன் களம் இறங்குவார். கடந்த சீரிஸில் சரியாக விளையாடவில்லை என்றாலும், தற்போது எஸெக்ஸ் அணியுடன் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் சொதப்பியிருந்தாலும் ஷிகர் தவானை அணியிலிருந்து நீக்கும் எண்ணத்தில் கோலி இல்லை. அதனால் அவர் நீடிப்பார். முதல் டவுன் பேட்ஸ்மேனாக  அஜிங்கிய ரஹானே இருப்பார்.

டி20-யில் நீடித்த குழப்பம் இங்கே இல்லை. இரண்டாவது டவுன் வேறு யாருக்கும் இல்லை. கேப்டன் விராட் கோலிக்குத்தான். இவருக்கு அடுத்தபடியாக புஜாரா களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இறங்குவார். இதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஷ்வின் அணிக்குள் இருப்பார். இவருடன் இடது கை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். ஸ்பின்னர்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களத்தில் இறங்கும். உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி என்பதுதான் வேகப்பந்து லைன் அப். 

கோலி
 

இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவன்!

ஜோ ரூட்தான் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன். முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் அணிக்குள் இடம்பெறுவது ரூட்டுக்குப் பெரிய பலம். அதேபோல, ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணிக்குள் இடம்பிடிக்கிறார்கள். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் கடந்த 2014 சீரிஸில் நான்கு முறை கோலியை வீழ்த்தியவர். அதனால் ஆண்டர்சன் இருப்பது இங்கிலாந்துக்குப் பெரிய பலம்.

இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை இடது கை பேட்ஸ்மேனான டேவிட் மாலன் டார் ஆர்டர் பேட்ஸ்மேனாக இடம்பிடிப்பார். ஜானி பார்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் அலஸ்டர் குக்கும் சேர்ந்து ஜோ ரூட்டுக்கு பேட்டிங்கில் பக்கபலமாக இருப்பார்கள். ஸ்பின் பெளலிங்கைப் பொறுத்தவரை மொயின் அலி, அடில் ரஷித் என்கிற அதே கூட்டணியுடனேயே இங்கிலாந்து இறங்கும். ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குத் துணையாக கீட்டான் ஜென்னிங்ஸ் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் இடம்பிடிப்பார் என எதிர்பாக்கலாம். 

கோலி

பிட்ச்!

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கிறது. இது முழுக்க முழுக்க இங்கிலாந்து அணிக்குச் சாதகமான மைதானம் என்றே சொல்லலாம்.  இங்கு இங்கிலாந்து அணியே அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறது. இது அலஸ்டர் குக்கின் வேட்டைக்களம். இங்கு  9 போட்டிகளில் விளையாடி 856 ரன்கள் குவித்திருக்கிறார் குக். இந்த மைதானத்தில் இவரின் ஆவரேஜ் 65.84. அதனால் குக் இந்திய பெளலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். அதேபோல, இது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைவிட இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களே ஃபுல் ஃபார்மில் இருப்பதால் முதல் டெஸ்ட்டை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கே அதிகம் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்