`கைகொடுத்த அஷ்வின், ஷமி' - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்தது | England scores 285 runs in day one

வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (01/08/2018)

கடைசி தொடர்பு:00:05 (02/08/2018)

`கைகொடுத்த அஷ்வின், ஷமி' - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்தது

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 285 ரன்கள் குவித்துள்ளது.

அஷ்வின்

twitter /ICC

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடி முடித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா, ஜடேஜா, குல்தீப் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் மூன்று வேகபந்துவீச்சாளர்கள் - ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற காம்போவில் இந்தியா களமிறங்கியது. தனது 1000மாவது டெஸ்டில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு அலஸ்டர் குக், ஜென்னிங்ஸ் இணை துவக்கம் தந்தது. நிதானமாக ஆட்டத்தை துவக்கிய இந்த ஜோடிக்கு அஷ்வின் அதிர்ச்சியளித்தார். 8வது ஓவரிலேயே அஸ்வின் ஓவரில் போல்டாகி வெளியேறினார். 

பின்னர் இணைந்த  ஜென்னிங்ஸ்  - கேப்டன் ஜோ ரூட் ரன்கள் சேர்த்தது. 42 ரன்களுக்கு ஜென்னிங்ஸ் வெளியேற, நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 156 பந்துகளில் 80 ரன்களை எடுத்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்தவேளையில் 80 ரன்களில் ரன் அவுட்டானார். அவரை இந்திய கேப்டன் விராட் கோலி டைரக்ட் ஹிட் முறையில் மிகவும் அற்புதமாக ரன் அவுட் செய்தார். அடுத்ததாக பேர்ஸ்டோ 70 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ ஜோ ரூட் ஜோடியின் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்தின் இன்னிங்ஸை நல்லநிலைக்குக் கொண்டுவந்தது. 

இவர்களைத்தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் அபாரமாக பந்துவீசினார். குக், ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற வீரர்களை அஷ்வின் விரைவாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக 25 ஓவர்கள் வீசி, 60 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளைய தினம் மிச்சமிருக்கும் ஒரு விக்கெட்டை விரைவாக வீழ்த்திவிட்டு இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க