உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்! | World Badminton Championships 2018: PV Sindhu and Kidambi Srikanth won, HS Prannoy out

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:08:01 (02/08/2018)

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்!

பேட்மின்டன்

சீனாவின் நான்ஜிங் நகரில், 2018-ம் ஆண்டுக்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் ஆடிய பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் பிட்ரியானி ஃபித்ரியானியை 21-14, 21-9 என நேர் செட்டுகளில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 35 நிமிடங்கள் நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஶ்ரீகாந்த், ஸ்பெயினின் பப்லோ அபியனிடம் 21-15, 12-21, 21-14 இரண்டாவது செட்டை இழந்தாலும், சுதாரித்து பின் வெற்றிபெற்றார். இருவரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு சாய் பிரனீத் 21-18, 21-11 என நேர் செட்டுகளில் வெற்றிபெற்றார். மற்றொரு ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சமீர் வர்மா ஐந்து முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானிடனை 17-21, 14-21 என வீழ்ந்தார். HS பிரணாயும் தோல்வி அடைந்தார். 

அதேபோன்று, நேற்று அனைத்து இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு தோல்விதான். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணை, மனு அட்ரி - சுமீத் ரெட்டி இணை, தோல்வியைத் தழுவினர். மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, உலக அளவில் 2-வது இடம் வகிக்கும் ஜப்பானின் யூகி- சயகா இணையை எதிர்கொண்டு 14-21, 15-21 என செட் கணக்கில் தோல்வியடைந்தனர். தற்போது, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், அனைத்து இரட்டையர் பிரிவுகளிலும் கலப்பு இரட்டையர் இணையான சாத்விக்சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா இணையே எஞ்சியிருக்கிறார்கள்.