செரீனாவை வீழ்த்திய ஜோஹனா! டென்னிஸ் வரலாற்றில் மோசமான தோல்வி இது

‘எனது மோசமான ஆட்டத்தால் நம்பிக்கை அடைந்த எதிராளி, மிக எளிதாக என்னை வீழ்த்திவிட்டார்’. தோல்விக்குப் பின்னர் டென்னிஸ் வீராங்கனை செரீனா உதிர்த்த வார்த்தைகள்.

டென்னிஸ்

23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, தன் டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு தோல்வியைக் கண்டதில்லை. 1995-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பயணத்தில், தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை அவர் சந்தித்ததே இல்லை. இது, செரீனாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சிலிக்கான் வேலி கிளாசிக் டென்னிஸ் தொடரில்தான் இந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் செரீனா. அதுவும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனாவும் - இங்கிலாந்து வீராங்கனை ஜோஹனா கொன்டாவும் மோதினர். இதில், முதல் செட்டில் செரீனா தனது வழக்கமான ஆட்டத்தை விளையாடவில்லை. பல்வேறு தவறுகளைச் செய்தார். இதன் காரணமாகத் தனது முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட்டிலும் இதே நிலைதான் தொடர்ந்தது. கொன்டாவின் சர்வுகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.  அவற்றை எதிர்க்கொள்ள முடியாத செரீனா, இந்த செட்டை 0-6 என்ற கணக்கில் மோசமாக இழந்தார். ஜோஹனா கொன்டா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் கைப்பற்றினார். டென்னிஸ் தர வரிசையில், 48-வது இடத்தில் ஜோஹனா இருக்கிறார்.

தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செரீனா,  இரண்டாவது செட்டில் அவர் சிறப்பாக விளையாடினார் என நினைக்கிறேன். நான், முதல் செட்டில் ஒரு மனதாக இல்லை. எனது மோசமான ஆட்டத்தால் நம்பிக்கை அடைந்தவர், மிக எளிதாக என்னை வீழ்த்திவிட்டார்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!