வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/08/2018)

கடைசி தொடர்பு:07:29 (04/08/2018)

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - சாய்னா வெளியேற்றம்; அரையிறுதியில் சிந்து!

சீனாவில் நான்ஜிங் நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானைச் சேர்ந்த நொசொமி ஒகுஹராவை 21-17 21-19 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான அகனே யமகுச்சியோடு மோதவுள்ளார். 

சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தடுத்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் நான்காவது முறையாக உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதுவரை விளையாடிய உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெங்கலப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். அதற்கேற்ப அடுத்தடுத்து நேர் செட்களில் வெற்றிபெற்று வருகிறார். 

மகளிர் ஒற்றையர்  பிரிவில் வெற்றி பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்பிரனீத்தும் தோல்வியடைந்தார். மிக்ஸட் டபுள்ஸ் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியைத் தழுவியது.