திருநெல்வேலியில் டாஸ் போட்டு போட்டியைத் தொடங்கிவைக்கும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று திருநெல்வேலி வந்திருக்கிறார்.

dhoni

இந்தியா சிமென்ட்ஸின் முதல் தொழிற்சாலை திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து என்னும் இடத்தில் 1946-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பாக தொடங்கப்பட்ட சிமென்ட் தொழிற்சாலைகளில் ஒன்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். 72 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு முதல்முறையாக வருகிறார் தோனி. இந்தியா சிமென்ட்ஸ் தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறுபவர்கள் மற்றும் சிறப்பான சாதனைகளைப் படைத்தவர்களுக்கு தோனி பரிசுகள் வழங்கி கெளரவிக்க இருக்கிறார்.

அதோடு திருநெல்வேலியில் இன்று நடைபெற இருக்கும் கோவை கிங்ஸுக்கும், மதுரை பேந்தர்ஸுக்கும் இடையிலான போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைக்க இருக்கிறார் தோனி.

தோனி திருநெல்வேலிக்கு வந்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. தோனிக்கு சிறப்பான தென் இந்திய உணவுகள் தயாரித்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!