பேட்ஸ்மேன் கோலி சூப்பர்... ஆனால், கேப்டன் கோலி செய்த 5 தவறுகள்! #ENGvIND | England Vs India First Test Match Analysis

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (04/08/2018)

கடைசி தொடர்பு:10:08 (06/08/2018)

பேட்ஸ்மேன் கோலி சூப்பர்... ஆனால், கேப்டன் கோலி செய்த 5 தவறுகள்! #ENGvIND

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி சேர்த்த ரன்கள் மட்டும் 200. ஆனால், இந்தியாவின் மற்ற 10 வீரர்களும் இரண்டு இன்னிஸிலும் சேர்த்து அடித்த ரன்கள் 236. பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததுதான் இந்த முதல் டெஸ்ட்டின் தோல்விக்குக் காரணம்.

பேட்ஸ்மேன் கோலி சூப்பர்... ஆனால், கேப்டன் கோலி செய்த 5 தவறுகள்! #ENGvIND

ங்கிலாந்தில் தனது முதல் செஞ்சுரியை நிறைவுசெய்த விராட் கோலி, கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கவேண்டிய தங்கத்தருணம் ஜஸ்ட் மிஸ்! இந்திய பெளலர்கள் அசத்த, மறுபக்கம் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, வென்றிருக்க வேண்டிய டெஸ்ட்டை இழந்திருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் என பேட்ஸ்மேன் கோலி சூப்பர். ஆனால், கேப்டன் கோலி..?!

கோலி

1. தீராத ப்ளேயிங் லெவன் குழப்பம்?!

டாஸ் போட்டதும் 5 ஸ்பெஷல் பேட்ஸ்மென், ஹர்திக் என்னும் ஆல்ரவுண்டர், அஷ்வின் என்னும் ஆஃப் ஸ்பின்னர், தினேஷ் கார்த்திக் என்னும் விக்கெட் கீப்பர், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என அணியை அறிமுகப்படுத்தினார் கேப்டன் கோலி. இந்திய அணி அறிவிக்கப்பட்டதுமே எல்லோருக்கும் ஏமாற்றம். காரணம் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான சேத்தஷ்வர் புஜாரா அணியில் இல்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் எடுக்கப்பட்டிருந்தார். தவானின் இடத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. புஜாரா கவுன்ட்டி கிரிக்கெட் ஆடி, இந்த சீரிஸுக்காகவே தயாரானவர். ஆனால், அவரை அணியில் இருந்து கழற்றிவிட்டது கோலி செய்த முதல் தவறு.

2. டெஸ்ட் போட்டிக்கு சரியான ஆல் ரவுண்டரா ஹர்திக் பாண்டியா?

டெஸ்ட் போட்டிக்கு ஆல் ரவுண்டர் தேவைதான். ஆனால், அவர் ஒரு இன்னிங்ஸில் 30 ஓவர்கள் வரை வீசுபவராகவும், ஒரு இன்னிங்ஸில் 30 ரன்களுக்களுக்கு மேல் அடிப்பவராகவும் இருக்கவேண்டும். அப்படித்தான் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டுவந்தார் கோலி. ஆனால், அவர் முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசினார். 46 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவர் அடித்த ரன்கள் வெறும் 22. இரண்டாவது இன்னிங்ஸில் பாண்டியாவுக்கு பெளலிங் வாய்ப்பே வழங்கப்படவில்லை. பேட்டிங்கில் டெய்ல் எண்டர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியைப் பொறுத்தவரை அஷ்வினே ஒரு ஆல் ரவுண்டர்தான். பாண்டியாவின் இடத்தை ஒரு பெளலருக்குக் கொடுத்திருக்கலாம்.

கோலி

3. இரண்டு ஸ்பின்னர்கள் நிச்சயம் வேண்டும்!

இந்திய அணியின் பலமே ஸ்பின்தான். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னில்தான் அதிகம் தடுமாறுவார்கள். எட்ஜ்பேஸ்டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றது என்றாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் என்கிற காம்பினேஷனோடு கோலி களமிறங்கியிருக்கவேண்டும். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை குல்தீப் யாதவுக்கு கொடுத்திருந்தால் இங்கிலாந்தின் டோட்டல் இன்னும் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம். டெய்ல் எண்டர்கள் திணறியிருப்பார்கள். இரண்டு இன்னிங்ஸிலும் அஷ்வினைத்தான் அதிக ஓவர்கள் வீசவைத்தார் கோலி. அஷ்வின் மட்டுமே மொத்தமாக 47 ஓவர்கள் வீசினார். இன்னொரு ஸ்பின்னர் இருந்திருந்தால் அஷ்வினின் பிரஷர் குறைந்திருக்கும். அந்த வாய்ப்பை வீணடித்துவிட்டார் கோலி.

கோலி

4. பேட்டிங் ஆர்டரில் நடந்த குளறுபடி!

மூன்றாவது நாளில் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் இருக்கும் நிலையில் ரஹானே அவுட் ஆனதும் தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்கு பதிலாக அஷ்வின் களமிறக்கப்பட்டார். கடைசி சில ஓவர்களே இருக்கும் நிலையில்தான் நைட் வாட்ச்மேன்கள் இறக்கிவிடப்படுவார்கள். ஆனால், அஷ்வினை ஏன் இறக்கினார் என்பதே புரியவில்லை. வந்த மூன்றாவது ஓவரில் அஷ்வின் அவுட். அஷ்வினுக்குப் பிறகு பாண்டியா அல்லது இஷாந்த் ஷர்மா என யாரையாவது களமிறக்கியிருக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். 

கோலி

5. சொதப்பல் பேட்ஸ்மேன்கள்!

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி சேர்த்த ரன்கள் மட்டும் 200. ஆனால், இந்தியாவின் மற்ற 10 வீரர்களும் இரண்டு இன்னிஸிலும் சேர்த்து அடித்த ரன்கள் 236. பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததுதான் முதல் டெஸ்ட்டின் தோல்விக்குக் காரணம். இரண்டாவது இன்னிங்ஸில் சில ஆச்சர்யங்களை கோலி செய்திருக்கலாம். தவானுக்கு பதிலாக ராகுலை ஓப்பனிங் இறக்கியிருக்கலாம். அதேபோல, ரஹானே 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கியிருக்கலாம். ஆனால், அப்படி எந்த சஸ்பென்ஸும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் சொதப்பியது போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் இறங்கிக்கொண்டிருந்ததை கோலி தடுத்திருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்