'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு! | The making video of vishwaroopam 2 released

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (06/08/2018)

கடைசி தொடர்பு:19:32 (06/08/2018)

'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ, பல அதிரடிக் காட்சிகளுடன் இன்று மாலை வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம்

கமல்ஹாசன் இயக்கி நடித்த  `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. அதன் பின்னர், இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியானது. 

முதல் ட்ரெய்லரைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டாவது ட்ரெய்லரும் வெளியானது. நடிகர் கமல்ஹாசன், படத்தின் புரமோஷனுக்காகப் பல்வேறு மொழிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் உருவானது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.