`தவான் இப்படி ஆடினால் விக்கெட்டைதான் இழப்பார்' - விளாசும் சுனில் கவாஸ்கர்! | Shikhar simply does not want to change his game - Sunil Gavaskar

வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (07/08/2018)

கடைசி தொடர்பு:09:44 (07/08/2018)

`தவான் இப்படி ஆடினால் விக்கெட்டைதான் இழப்பார்' - விளாசும் சுனில் கவாஸ்கர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி போன்று தவான் ஆடிக்கொண்டிருந்தால் விக்கெட்டை இழந்து பெவிலியன்தான் திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. விராட் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். தொடக்க ஆட்டக்காரரான தவான் முதல் டெஸ்டில் முறையே 26 மற்றும் 13 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ``தவான் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதுபோன்று ஆடுவதால்தான் தன்னால் வெற்றிபெற முடிகிறது என அவர் நம்புகிறார். இந்த அணுகுமுறையால் ஒரு நாள் போட்டிகளில் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் ஏனெனில் அதிகப்படியான ஃபீல்டர்கள் சிலிப்பில் இருக்க மாட்டார்கள். பேட்டில் பட்டு எட்ஜ் ஆகும் பந்து எல்லைக்கோட்டுக்குச் சென்றுவிடும். ஆனால், டெஸ்ட் போட்டியில் அதுபோன்ற ஷாட்டுகள் ஆடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.  டெஸ்ட் போட்டியின்போது தவான் தனது மனநிலையை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும். சிகப்பு நிற பந்துகளில் ஆடும்போது தவான் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்.” என்றார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்தியா களமிறங்க வேண்டும். புஜாராவும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான நுட்பமும், பொறுமையும் அவரிடம் உள்ளது. இந்திய அணி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. விராட் கோலியை தவிர்த்து பிறரது  பேட்டிங் மோசமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.