லார்ட்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் -வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! | BCCI share a lunch menu of team india in Twitter

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (12/08/2018)

கடைசி தொடர்பு:12:40 (12/08/2018)

லார்ட்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் -வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியினர் உண்ணும் உணவுகளின் வகைகளை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

உணவு

PhotoCredits: Twitter/@bcci

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் மிகவும் போராடி இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. 

மெனு

PhotoCredits: Twitter/@bcci

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியமான பிசிசிஐ தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக இந்திய அணியினரின் அன்றைய உணவு வகைகளின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை பார்க்கும் அனைவரது வாயிலும் கண்டிப்பாக எச்சில் ஊறும் என்பது உண்மை. அந்த அளவுக்கு உள்ளது கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியல். ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இரால், உருளைகிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ் கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன. 

இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச்

PhotoCredits: Twitter/@bcci

இந்த மெனுக்கள் சில உணவு பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு பல எதிர்மறையான கருத்துகளும் எழுந்துள்ளன. இவ்வளவு உணவை உண்பதால் தான் வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த மெனுவுக்கு தொடர்ந்து லைக்குகளும் குவிந்துகொண்டே தான் வருகின்றன.