`எல்லாத்தையும் விட கருணைக்கு மதிப்பு அதிகம்' - குழந்தைகளுக்கு உதவ முன்வந்த ஆப்கன் வீரர் ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார்.

ரஷீத்

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். கடந்த 2015ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், தனது திறமையால் குறைந்த காலத்தில் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளார். தொடர்ந்து கிரிக்கெட்டில் அசத்தி வந்த இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணி முக்கியமான வீரராக மாறியுள்ளார். ஸ்பின்னர் என்ற பார்வையில் பார்க்கப்பட்ட ரஷீத் ஐபிஎல் களம் கைக்கொடுக்க ஆல் ரவுண்டராகவும் மாறியுள்ளார். இதனால் இவருக்கு இந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோல் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள், குறைந்த வயதில் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதனால் `கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான்' என இந்திய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே, ரஷீத் கான் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். ஆப்கன் - அமெரிக்க போரினால் அங்கு ஏரளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக புதிதாக தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, ``இதன்மூலம் என்னால் மிகப்பெரிய காரியங்களை செய்ய முடியாது. ஆனால் மிகப்பெரிய அன்பைக் கொண்டு சிறிய அளவிலான காரியங்களை என்னால் செய்ய முடியும். மிகப்பெரிய எண்ணங்களை விட நாம் காண்பிக்கும் சிறிய அளவிலான கருணைக்கு மதிப்பு அதிகம். என்னுடைய அறக்கட்டளை மூலம் ஆப்கன் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!