வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (12/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (12/08/2018)

`இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட்; தொடர் சொதப்பில் முரளி விஜய்' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் இந்திய வீரர் முரளி விஜய் டக் அவுட் ஆகி அதிர்ச்சியுள்ளார். 

முரளி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது. இதன் பின்னர், 5 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நழுவவிட்டது. தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக ஒருநாள் தாமதமாக 10ம் தேதி போட்டி தொடங்கப்பட்டது. முதல் போட்டியை போலவே, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்தை விட 223 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர். ஆனால் முதல்வரிசை ஆட்டக்காரர்கள் யாரும் களத்தில் இல்லை. 

இதற்கிடையே, இந்த இரண்டு டெஸ்டிலும் தொடக்க வீரர்கள் சொதப்பலாக ஆடி வருகின்றனர். குறிப்பாக முரளி விஜய்யின் ஆட்டம் மோசமாக உள்ளது. முதல் டெஸ்டில் சொதப்பிய முரளி விஜய், இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆகியுள்ளார். முதல் இன்னிங்சில் ஐந்து பந்துகளுக்கு வெளியேறிய அவர், இரண்டாவது இன்னிங்சில் 8 பந்துகளை வெளியேறினார். மேலும் இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆனது பெரும் சோகம். இதையடுத்து ட்விட்டரில் முரளி விஜய்யை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் இந்தியா விளையாடியுள்ள இரு வெளிநாட்டுத் தொடர்களிலும் விளையாடிய 10 இன்னிங்ஸிலும் விஜய் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனைக் காரணமாக கொண்டு அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க