முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.

அஜித்  வடேகர்

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது  77) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர்  மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள்  இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர்.  இடது கை பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை சதங்கள் விளாசியுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக இவர் அடித்த சதம், ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்கது. 1968 பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில், வடேகரின் சதத்தால் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. ஆசிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெளிநாட்டில் கைப்பற்றியது அதுவே முதல்முறை.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 99 ரன்கள், இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்க உதவியது. அஜித் வடேகர், இந்தியாவின் 16-வது டெஸ்ட் கேப்டன். இவரது தலைமையில் இந்திய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 4 வெற்றி 4 தோல்விகளைக் கண்டுள்ளது. முதல் தர போட்டியில் அதிகபட்சமாக 323 ரன்கள் குவித்துள்ளார்.1974-ம்  ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.  அதன்பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துவந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான 'அர்ஜூனா' விருது (1967), பத்மஸ்ரீ (1972) விருதுகளைப் பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!