‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்!’ - செரீனா வில்லியம்ஸ்

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்  தோல்வியடைந்து வெளியேறினார்.

வெற்றி

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா மோதினர். முதல் செட்டை கிவிடோவா  6-3 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சுதாரித்த செரினா,  இந்த செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் சிறப்பாகச் செயல்பட்ட கிவிடோவா, 6-3 என அந்த செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செரீனா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செரீனா,  “நான் இன்னும் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் கடினமாக உழைக்கப்போகிறேன், நான் நிறையப் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.   

வெற்றிக்குப் பின்னர் பேசிய கிவிடோவா,  “நாங்கள் இருவரும் திரும்பி வருகிறோம் - காயத்தில் இருந்து, தாய்மையில் இருந்து. செரினாவுடன் விளையாடுவது மிகவும் சிறப்புவாய்ந்தது” என்றார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!