வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:09:22 (16/08/2018)

இங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிகெட் வீரர்கள், அங்கு தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். 

கிரிக்கெட் வீரர்கள் தேசியக்கொடி ஏற்றினர்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. நேற்று, இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில், இந்திய  தேசியக்கொடியை ஏற்றி மரியாதைசெலுத்தினர். 

கிரிக்கெட் வீரர்கள்

அனைவரும் கொடியேற்றும் கம்பத்தைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்திய கேப்டன் விராட் கோலி உடனிருந்தார். பிறகு, 'இந்திய மக்கள் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வாழ்த்துகள்' என கோலி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும், பல வீரர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கிருந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட நாட்டிங்காம் புறப்பட்டுச்சென்றனர்.

 இந்திய கிரிகெட் அணி அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.