நான்கு மாதம் கடும் பயிற்சி... கோலியை வீழ்த்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங்!#YoYoTest

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் சர்தார் சிங் யோ-யோ டெஸ்டில் அசத்தி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

சர்தார் சிங்


18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை இந்தோனேசியாவின் ஜகார்டா மற்றும் பாலெம்பாங் நகரங்களில் நடைபெறுகிறது. இதற்காக ஆசிய நாடுகள் அனைத்தும் தயாராகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் இந்தத் தொடருக்காக தயாராகி வருகின்றனர். இந்த விளையாட்டுத் தொடரில் ஹாக்கி போட்டிக்காக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் சர்தார் சிங். இந்திய அணியின் நட்சத்திர வீரரான இவர் விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்படும் யோ -யோ டெஸ்ட்டில் தன் உடல் தகுதியை நிரூபித்து அணியில் இடம் பிடித்துள்ளார். 

யோ -யோ டெஸ்ட் என்பது விளையாட்டு வீரர்களின் உடல் தகுதியை நிர்ணயம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் 16.1 புள்ளிகள் பெற்றால்தான் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும். யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற முடியாததால் சில மூத்த வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாக முடியாமல் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி, ஃபிட்னெஸில் அதிக கவனம் கொண்டவர். யோ -யோ டெஸ்டிலும் எளிதில் வெற்றிபெறக் கூடியவர். 

இந்த நிலையில், ஹாக்கி மைதானத்தில் வேகமாகச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியதைத் தொடர்ந்து அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார் சர்தார் சிங். கடந்த 4 மாதங்களாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகி வந்த இவர், கடுமையான உழைப்பின் மூலம் யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் ஃபிட்னெஸில் கில்லியான கோலியைவிட அதிக புள்ளிகள் பெற்றுள்ளார். கோலியின் யோ -யோ டெஸ்ட் ஸ்கோர் 19. 32 வயதான சர்தார் தற்போது பெற்றுள்ள ஸ்கோர்  21.4.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!