மூன்றாவது டெஸ்ட்: கோலியின் வியூகம் என்ன? தாக்குப்பிடிக்குமா இந்தியா...

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

விராட் கோலி

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி-20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றின. தற்போது இவ்விரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட்  31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  நடந்த 2–வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் பேட்டிங் கவலைக்கிடமாக உள்ளது. முதல் டெஸ்டில் கேப்டன் விராட் கோலியைத் தவிர பிற பேட்ஸ்மேன்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.இரண்டாவது டெஸ்டில் அண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரே நிலைகுலைந்தது. அஸ்வினைத் தவிர வேறு எந்த வீரரும் தாக்குப்பிடிக்கவில்லை. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிகாமில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!