`முரளி விஜய், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவுக்கு ரெஸ்ட்!’ - நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங்

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி,  ஃபீல்டிங் தேர்வுசெய்தது.

டாஸ் போடும் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன்கள்

Photo Credit:BCCI

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை அடுத்து டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, இந்திய அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியைத் தவிர்க்க, இந்தப் போட்டியில் வெற்றி அல்லது சமன் செய்யவேண்டிய கட்டாயத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. 

நாட்டிங்ஹாமில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஃபீல்டிங் தேர்வுசெய்தார். இங்கிலாந்து அணி ஏற்கெனெவே பிளேயிங் லெவனை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!