வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:02:30 (19/08/2018)

கோலி - ரஹானா பொறுப்பான ஆட்டத்தால்  நிமிர்ந்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்தியக்கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  நாட்டிகாமில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தவறிய முரளி விஜய்  மற்றும் தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான், ரிஷப் பந்த் மற்றும்  பும்ரா அணியில் சேர்க்கப்பட்டனர். தொடக்கத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மிரட்டினார். உணவு இடைவேளிக்கு முன்பாகவே இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த3 விக்கெட்டுகளை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.  இதன்பின்னர் கேப்டன் விராட் கோலியும் - ரஹானாவும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவர் அரைசதம் அடித்தனர். இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானா 81 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது. சதத்தை நோக்கிச் சென்ற விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த போது, ரஷித் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.