உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் - டாப் டென்னில் பி.வி.சிந்து!

உலகளவில் அதிகம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனைகள் பட்டியலில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து 7-வது இடத்தில் உள்ளார். 

பி.வி சிந்து

உலகளவில் உள்ள தடகள வீராங்கனைகளில் ஒரு வருடத்தில் மட்டும் பரிசுத் தொகைகள் மற்றும் விளம்பரங்கள் என அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 23 வயதான இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து 8.5 மில்லியன் டாலர்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். இது மட்டுமல்லாமல் பிரிட்ஜ்ஸ்டோன், கேடொரேட், நோக்கியா, பேனசோனிக் ஆகிய நிறுவனங்கள் சிந்துவுக்கு ஸ்பான்சர் செய்வதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 18.1 மில்லியன் டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். டென்மார்க் டென்னிஸ் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி 13 மில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 11.2 மில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உலகளவில் உள்ள விளையாட்டு வீரர்களில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 இடங்களில் ஒரு பெண்கள் கூட இல்லை. அவை அனைத்தையும் ஆண்களே ஆக்கிரமித்துள்ளனர். பி.வி சிந்து இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் வருவாயில் மூன்றில் ஒரு மடங்கு மட்டுமே வாங்குகிறார் என்பது கூடுதல் செய்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!