வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (23/08/2018)

கடைசி தொடர்பு:07:19 (23/08/2018)

முரளி விஜய் அவுட், ப்ரித்வி ஷா இன்: 4-வது மற்றும் 5-வது போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. தற்போது இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று நாட்டிங்காம் நகரில் இந்திய தேர்வுக்குழு கூடி 4-வது மற்றும் 5-வது போட்டிக்கான அணியைத் தேர்வு செய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து  மூன்று போட்டிகளாக மாற்றி வருகின்றனர். முதல் போட்டியில் விஜய் மற்றும் தவான் களமிறங்கிய நிலையில், இரண்டாவது போட்டியில் விஜய் மற்றும் ராகுல் இணை களமிறங்கியது. மூன்றாவது போட்டியில் தவான், ராகுல் இணை களமிறங்கியது. இதனால் இன்றைய அணி தேர்வில் தொடக்க ஆட்டகாரர்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதேபோன்று 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார்.  அதேபோன்று ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். 

ப்ரித்வி ஷா

Photo: Twitter/BCCI

இவர்கள் இருவருக்குப் பதிலாக இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் ஹனும விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர். பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்படக்கூடியவர். 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் முழு விவரம்:

விராட் கோலி (கேப்டன்), தவான், ராகுல், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்திக், ரிஷ்ப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷ்ரதுல் தாக்கூர், ஹனும விஹாரி. 

அதேபோன்று ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதியாக இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.