26 கோல்கள் அடித்து இந்திய ஹாக்கி அணி வெற்றி... ஹாங்காங் அணிக்கு நேர்ந்த பரிதாபம்

கார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 26 கோல்கள் அடித்து ஹாங்காங் அணியை வென்றது. 

இந்திய ஹாக்கி அணி

ஆசிய விளையாட்டு போட்டியில்' பி ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி உலகத் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கிறது. கத்துக்குட்டி ஹாங்காங் அணி 45-வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் நேற்று களம் கண்டன. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இந்திய வீரர் அக்ஷய்தீப் சிங் முதல் கோல் அடித்தார். ரூபிந்த்ரபால் சிங் அடுத்த நிமிடத்திலேயே இரண்டாவது கோல் அடிக்க இந்திய அணி கோல் மழை பொழியத் தொடங்கியது. 

முதல் பாதியில் இந்திய அணி 14 கோல்கள் திணித்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் மேலும் 12 கோல்கள் அடித்து 26-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஹாங்காங் அணியால் பதிலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதுதான் பரிதாபம். 

இந்த ஆட்டத்தில் ரூபிந்தரபால் சிங் 5 கோல்களும் ஹர்மன்ப்ரீத்சிங் 4 கோல்களும் அக் ஷய்தீப் சிங் 3 கோல்களும் மன்ப்ரீத்சிங், லலித் உபாத்யா, வருண்குமார் தலா இரு கோல்களும் அடித்தனர். வரும் வெள்ளிக்கிழமை அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது 

முன்னதாக 1932-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை 24-1  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதே இந்திய அணியின் சிறந்த வெற்றி ஆகும். நியூசிலாந்து அணி சாமோவா அணியை 36-1  என்ற கோல் கணக்கில் வென்றது உலகளவில் சிறந்த வெற்றியாக கருதப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!