திருமண வாழ்வில் இணையும் இந்திய ரக்பீ அணிகளின் கேப்டன்கள்!

இந்தியாவில் அதிகம் பிரபலமடையாத ஒரு விளையாட்டு ரக்பீ. இந்தியாவில் ரக்பீ விளையாட்டுக்கென்று தனியாக ஒரு அணி இருக்கிறது என்று கூட பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிஜத்தில், இந்திய ரக்பீ ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் உள்ளது. ஆனால் இப்போது செய்தி, அந்த விளையாட்டுக் குறித்து இல்லை. இந்திய ஆண்கள் அணியின் கேப்டனும், இந்திய பெண்கள் அணியின் கேப்டனும் விரைவில் திருமண வாழ்வில் இணையவுள்ளனர். 

ரக்பீ அணிகளின் கேப்டன்

Photo: Twitter/ESPN India

இந்திய ஆண்கள் ரக்பீ அணியின் கேப்டன் கவுதம் தாகர். இந்திய பெண்கள் ரக்பீ அணியின் கேப்டன் நேகா பர்தேஷி. சமீபத்தில் தான் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.  

இவர்களின் காதல் தொடர்பாக நேகா பர்தேஷி கூறுகையில், “2009 -ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தாலும், 2015 -ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தான் முதன் முதலாகப் பேசினோம். இரண்டரை வாரங்கள் விளையாடி முடித்துவிட்டுப் பிரியும் போதுதான் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஸ்பெஷல் என்பதை உணர்ந்தோம்” என்றார். 

திருமணம்

Photo: Twitter/ESPN India

கவுதம் தாகர் கூறுகையில், “நேகா புனேவைச் சேர்ந்தவர். எனக்கு டெல்லி.  அதனால் அதிகம் சந்தித்தது கிடையாது. 2015 -ம் ஆண்டில் நடைபெற்ற அல்டிமேட் ஃபிட்னஸ் ஃபேன் என்ற போட்டியின் மூலம் மீண்டும் சந்தித்தோம். அதில் நான் பங்கேற்றதுக்கு முக்கிய காரணம் அவளைச் சந்திக்க தான்” என்றார். இந்தப் போட்டியில் நேகா இரண்டாவது சுற்றோடு வெளியேறினாலும், கவுதம் சாம்பியம் பட்டம் வென்றது குறைப்பிடத்தக்கது. விரைவில் திருமண வாழ்க்கையில் இணையவுள்ள இருவருக்கும் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!