`36 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை!’ - பேட்மின்டனில் இந்தியாவின் தாகத்தைத் தணித்த சாய்னா நேவால்

ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சாய்னா நேவால்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகின்றன. இதில், பெண்கள் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை சூ யிங்-கும் மோதினர். 36 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், தை சூ யிங் 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். இதன்மூலம், தை சூ யிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தோல்வியடைந்ததால், சாய்னாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இதுவரை சாய்னா - தை சூ யிங் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், அனைத்துப் போட்டிகளிலும் தை சூ யிங்கே வெற்றிபெற்றுள்ளார். இதில், 2018-ம் ஆண்டில் மட்டும் மூன்று முறை மோதியுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன், 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சையத் மோடி வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!