வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (27/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (27/08/2018)

‘தங்கத்தை நோக்கி சிந்து!’ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைப்பாரா?

ஆசிய விளையாட்டுப் போட்டி, பெண்கள் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவில் நடைபெற்றுவருகிறது. இதில், பெண்கள் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் யமாக்குச்சியும் மோதினர். இந்தப் போட்டியின் முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்தார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-10 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை. இறுதிப்போட்டிக்கு சிந்து முன்னேறியதால், வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான தை சூ யிங்கை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிபெற்று தங்கம் வென்றால். ஆசியப் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெறுவார்.

முன்னதாக நடைபெற்ற மற்றோரு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால்,  சீனாவின் தை சூ யிங்கும் மோதினர். 36 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், தை சூ யிங் 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். அரையிறுதியில் தோல்வியடைந்ததால், சாய்னாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மின்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன், 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சையத் மோடி வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.