ஆசிய விளையாட்டுப் போட்டி - 8 தங்கம், 13 வெள்ளிகளுடன் 9-வது இடத்தில் இந்தியா!

ஆசிய விளையாட்டுப்போட்டி ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. அதேபோல, தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி மற்றும் பெண்கள் பிரிவில் சுதா சிங் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி

18-வது ஆசியவிளையாட்டுப்போட்டிகள், இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அவர் தன் முந்தைய சாதனையான 87 மீட்டர் தூரத்தைவிட, ஒரு மீட்டர் தூரம் 88.06 மீட்டர் அதிகமாக எறிந்து சாதனைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார். இதற்கு முன்னர் சர்வதேச தடகளப் போட்டியில் 87.43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவர் உருவாக்கிய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில், தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தடை தாண்டி ஓடுதலில், 48.96 நொடிகளில், இரண்டாவதாக வந்து வெள்ளி வென்றுள்ளார் தருண்.

மற்றொரு நிகழ்வாக, தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் 3000 மீட்டர் தூரத்தை 9.40 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை சுதா சிங். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!