இந்தியா அபார பந்து வீச்சு! - 246 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

சௌத்தாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து - இந்தியாவுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா

PC : ICC

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்ட்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிபெற்றன. இதனால், தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து, 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார்.  இதைத் தொடர்ந்து,  4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் கேப்டன் ரூட்  ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார்.

PC :ICC

தொடர்ந்து பட்லரும், பென் ஸ்டோக்ஸ் இணையும் சேர்ந்து, இந்திய பந்துவீச்சாளர்களின் உத்திகளைக் கணித்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள், 26-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்த பட்லரும், 34-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்சும் ஷமியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 40 ரன்களை எடுத்த  மொயின் அலியைத் தனது சுழலில் வீழ்த்தினார் அஷ்வின். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியும், குர்ரனும் இணைந்து 81-ரன்கள் சேர்த்தனர்.  அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. அந்த அணி தரப்பில் சாம் குர்ரன் அதிகபட்சமாக 78 ரன்களையும், மொயின் அலி 40 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, ஷமி, அஸ்வின் தலா 2விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் விழ்த்தினர்.இதையடுத்து, பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணி, 4 ஓவர்களுக்கு 19 ரன்கள் எடுக்கையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுபெற்றது. தவான் 3, ராகுல் 11 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!