ஆறு விரல்களால் அவதிப்படும் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மான் - சிறப்பு ஷூ செய்யும் முயற்சியில் சென்னை ஐ.சி.எப் | Chennai ICF set to sponsor customised shoes for Asian Game gold medallist Swapna Barman

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (31/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (31/08/2018)

ஆறு விரல்களால் அவதிப்படும் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மான் - சிறப்பு ஷூ செய்யும் முயற்சியில் சென்னை ஐ.சி.எப்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டாதலான் விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மான் கால் விரல்களுக்கு ஏற்றபடி ஷூ தயாரிப்பதற்கான முயற்சியை சென்னை ஐ.சி.எப் முன்னெடுத்துள்ளது. 

ஸ்வப்னா பர்மான்

கொல்கத்தாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மான். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட ஸ்வப்னா, 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 800 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என ஏழு போட்டிகள் கொண்ட பெண்கள் ஹெப்டத்லானில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்குப் பிறவியிலேயே இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வப்னா, சாதரணமாக அனைவரும் அணியும் ஷூவையே அணிந்துவருகிறார். அதனால், அவருக்கு கடுமையாக கால் வலி ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆறு விரல் கொண்ட ஸ்வப்னாவுக்கென்று பிரத்யேகமான ஷூ தயாரிப்பதற்கான முயற்சியில் சென்னை ஐ.சி.எப் இறங்கியுள்ளது. ஐ.சி.எப் பொது மேலாளர் எஸ்.மணி, ஸ்வப்னாவுக்கென்று பிரத்யேகமான ஷூ தயார் செய்ய வேண்டும் என்று விளையாட்டுப் பிரிவுக்கு கோரிக்கைவிடுத்தார். அதையடுத்து, பிரத்தியேகமாக ஷூ வடிவமைப்பதற்கு ஐ.சி.எப் விளையாட்டுப் பிரிவு நைக் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. விரைவாக ஷூ தயார் செய்து தருவதற்கு கோரிக்கையும் வைத்துள்ளது.