நான்காம் நாளின் முதல் பந்தில் விக்கெட்... தொடரைச் சமன் செய்ய இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அணி வீரர் ஷமி

Photo: Twitter/ICC

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கெதிரான, 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளில், 2 டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி, சௌதாம்டனில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. 

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய தினம் கடைசி பந்தில் அடில் ரஷீத் ஆட்டமிழக்க, இன்று முதல் பந்தை எதிர்கொண்டார் ஸ்டூவர்ட்  பிராட். முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே பிராட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறப்பாக விளையாடி வந்த சாம் குர்ரான் 46 பந்தில் ரன் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 271 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பட்லர் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி இந்தப் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய 245 ரன்கள் தேவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!