வெளியிடப்பட்ட நேரம்: 22:23 (02/09/2018)

கடைசி தொடர்பு:07:47 (03/09/2018)

களத்தில் நின்று போராடிய கோலி, ரஹானே..! - இருந்தும் தொடரை இழந்த இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்தது.

கோலி

Photo: Twitter/Cricbuzz

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கெதிரான, 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளில், 2 டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி, சௌதாம்டனில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 271 ரன்கள் எடுத்து அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து வீரர்கள்

Photo: Twitter/Cricbuzz

அதன்மூலம் இந்தியாவுக்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். புஜாரா 5 ரன்களிலும், தவான் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கோலி 58 ரன்களிலும், ரஹானே 51 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 69.3 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியிடம் 3-1 என்ற கணக்கில் இழந்தது.